/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய வருகின்றீர்களா? செல்வகணபதி எம்.பி.,க்கு நேரு எம்.எல்.ஏ., அழைப்பு

ADDED : அக் 18, 2024 11:21 PM
புதுச்சேரி: அரசு பொதுமருத்துவமனை பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்ய வருகின்றீர்களா என செல்வகணபதி எம்.பி.,க்கு, நேரு எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேரு எம்.எல்.ஏ.,, பா.ஜ., மாநில தலைவரான செல்வகணபதி எம்.பி.,க்கு விடுத்துள்ள அறிக்கை:
இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மிக சிறப்பாக செயல்படுவதாகவும், நான் சுய விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவதாக தாங்கள் கூறியுள்ளீர்கள். தாங்கள், தற்போது ஓய்வாக இருந்தால், என்னுடன் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வாருங்கள். எத்தனை நோயாளிகள் தரையில் படுத்துள்ளனர் என்பதை காட்டுகிறேன்.
மருத்துவமனையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது. மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பதையும் காண்பிக்கின்றேன். நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் எவ்வளவு வெளியே வாங்குகின்றனர் என்பதை நேரில் பார்க்க முடியும்.
தாங்கள் வருகிறீர்கள் என்றால் 98430 48384 என்ற எனது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.