/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கல்வி நிலை குறித்து பேச தயாரா? நமச்சிவாயத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சவால்
/
புதுச்சேரி கல்வி நிலை குறித்து பேச தயாரா? நமச்சிவாயத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சவால்
புதுச்சேரி கல்வி நிலை குறித்து பேச தயாரா? நமச்சிவாயத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சவால்
புதுச்சேரி கல்வி நிலை குறித்து பேச தயாரா? நமச்சிவாயத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சவால்
ADDED : ஆக 13, 2025 02:40 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் கல்வி நிலை குறித்து மக்களிடம், புள்ளி விபரங்களுடன் பேசத் தயாரா என அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் சிவா சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
பா.ஜ.,-என்.ஆர்.காங்., அரசின் மீது குறை கூற வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சிகள், மத்திய அமைச்சர் கடிதத்தில் உள்ள புள்ளி விபரங்கள் எடுத்து வைத்து பேசுவதாக, அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
மாநிலத்தில் 69 பேர் மட்டுமே பள்ளியில் இருந்து இடை நின்றுள்ளனர். 10 ஆயிரம் பேர் என, தவறுதலாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாணவர்கள் பலர் பள்ளி மாறியபோது கடந்த 2023- 2024ம் ஆண்டு கல்வி அமைச்சகம் உருவாக்கிய வலைதளத்தில், பதிவு செய்யவில்லை.
அதனை இடைநிற்றலாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளாராம்.
அமைச்சர் கூறுவது போல், 10 ஆயிரத்து 54 மாணவர்களின் தரவுகளை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தவறுக்கு அதிகாரிகள் பொறுப்பா அல்லது அமைச்சர் பொறுப்பா?
மேலும், மத்திய கல்வி அமைச்சர், தவறான தகவலை வெளியிட்டதாகவும், உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிடுவாரா? என்பதை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க அரசு தவறிவிட்டது.
பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார், அசாம், ஹரியானா போன்ற மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரியிலும், பள்ளி படிப்பு இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் கல்வி அமைச்சக ஆய்வில் தெரிய வந்ததை உண்மை இல்லை என்பதை மறுப்பதா? எங்களின் குற்றச்சாட்டு உண்மையில்லை எனில், புள்ளி விபரங்களுடன் மக்கள் மத்தியில் பேசத் தயாரா?
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.