ADDED : பிப் 01, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நேரு வீதியில் உள்ள கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்த இருவர் அங்கிருந்து சப் இன்ஸ்பெக்டரிடம்,போலீஸ் வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை திருப்பி கொடு என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகராறு செய்தவர்கள் தங்களின் குடும்ப நண்பர்கள் எனவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கேட்க வந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீஸ் வேலைக்கு கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சப் இன்ஸ்பெக்டரிடம் ஒருவர் கேட்பதும், அதற்கு, இன்ஸ்பெக்டர் வாங்கி ஏமாற்றி விட்டார் என, சப் இன்ஸ்பெக்டர் கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.