/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் அச்சம்
/
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் அச்சம்
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் அச்சம்
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் அச்சம்
ADDED : அக் 14, 2024 08:17 AM
புதுச்சேரி : ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், சப்வே இணைக்க அமைக்கப்பட்டுள்ள 'யு' வடிவ பள்ளத்தில் வாகன ஓட்டிகள் திக் திக் பயத்துடன் கடந்து செல்கின்றனர்.
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ. 60 கோடி மதிப்பில் பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. பாலம் கட்டி முடித்து திறக்கும் நிலையில் உள்ளது.
புதிய பாலத்தின் கீழ் ஆரியப்பாளையம், வடமங்கலம் பக்கத்தில் இரு இடங்களில்சப்வே அமைத்து,ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய பாலம் வழியாக மங்கலம் சாலை இணைக்கப்பட்டுள்ளது.
சப்வே இணைப்புக்காக பழைய பாலம்சாலையில் 10 அடிபள்ளம் உருவாக்கி சாலையை'U' வடிவில் மாற்றி அமைத்துள்ளனர்.புதிய பாலம் கட்டி முடித்தாலும் இதுவரை திறக்கப்படவில்லை. பழைய பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. பழைய பாலத்தில் உள்ள 36 மின் விளக்குகளில் ஒன்று கூட எரியவில்லை. இதனால் பாலம் முழுதும் இரவு நேரத்தில் கும் இருட்டாக உள்ளது.
சப்வே இணைப்புக்காகஇரு இடங்களில், திடீர் பள்ளம் போல சாலையை யு வடிவில் மாற்றி வைத்திருப்பதால் இருட்டில் வரும் வாகன ஓட்டிகள் நிலை குலைந்து விடுகின்றனர். பெரிய விபத்துக்கள் நடப்பதிற்கு முன்பு மின் விளக்குகளை சரிசெய்யஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.