தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரியப்பாளையம் புதிய பாலம் இணைப்பு சாலை உள்வாங்கியது

ஆரியப்பாளையம் புதிய பாலம் இணைப்பு சாலை உள்வாங்கியது

ஆரியப்பாளையம் புதிய பாலம் இணைப்பு சாலை உள்வாங்கியது


ADDED : டிச 14, 2024 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 04:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ.60 கோடியில் கட்டி திறக்கப்பட்ட 2 மாதத்தில் அவலம்

புதுச்சேரி: ஆரியப்பாளையத்தில் ரூ. 60 கோடியில் கட்டப்பட்ட ஆற்று பாலம் திறக்கப்பட்ட 2 மாதத்தில் விரிசில் விழுந்ததை தொடர்ந்து நேற்று அரை அடி ஆழத்திற்கு இணைப்பு சாலை உள்வாங்கியதால், வெட்மிக்ஸ் கொட்டி பள்ளத்தை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரி - விழுப்புரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான தேசிய நெடுஞ்சாலை (45 ஏ) பாதையில், ஆரியப்பாளையத்தில் உள்ள சங்கராபரணி ஆற்று பாலம் தாழ்வான உயரத்தில் இருந்ததால் கடந்த 2020ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கியது. அதனால் ரூ. 60 கோடி மதிப்பில்360 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் பாலம்கட்டப்பட்டது.

இந்த பாலத்தை கடந்த அக்., 28ம் தேதி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தனர். இந்த பாலத்தின் கிழக்கு பகுதி இணைப்பு சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பாலத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் விரிசலை சரிசெய்ய உத்தரவிட்டார். விரிசல் பகுதியில் தார் கலவை ஊற்றி சமன் செய்தனர்.

இந்நிலையில் பாலத்தின் கிழக்கு பக்க இணைப்பு சாலையில் விரிசல் விழுந்த இடத்திற்கு அருகே நேற்று முன்தினம் அரை அடிஆழத்திற்கு உள்வாங்கியது.இதனால் பல வாகனங்கள் விபத்தில் சிக்கியது.

வில்லியனுார் போலீசார் இணைப்பு பாலம் உள்வாங்கிய பகுதியில் பேரி கார்டு அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

பாலம் உள்வாங்கிய பகுதியில் நேற்று மதியம் மண் மற்றும் கருங்கற்கள் கலந்த 'வெட்மிக்ஸ்' கலவையை கொட்டி, ரோலர் மூலம் சமன் செய்யும் பணிதுவங்கியது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலத்துடன் அமைக்கப்பட்ட இணைப்பு சாலையில், இரு பக்க கான்கிரீட் சுவர் இடையில், மேற்கு பக்கம் (வடமங்கலம்) பகுதியில் செம்மண் கொட்டி நிரப்பினர்.

கிழக்கு பக்கமான (ஆரியப்பாளையம்) பகுதியில் கட்டட கழிவுகள், குப்பையுடன் கூடியஅழுக்கு மண்கொட்டி நிரப்பி தார் சாலை அமைத்ததால், சாலை உள்வாங்குவதாக குற்றம் சாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us