/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுதம் வைத்திருந்த ரவுடி அதிரடி கைது
/
ஆயுதம் வைத்திருந்த ரவுடி அதிரடி கைது
ADDED : பிப் 03, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கனுவாப்பேட் பகுதியில் ஆயுதத்துடன் நின்றிருந்தவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.
அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கனுவாப்பேட் வாணியர் வீதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் புண்ணியக்கொடி, 32, என்பதும், இவர் கத்தியை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புண்ணியக்கொடியை கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். இவர் மீது, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

