sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காட்பாடியில் நடக்கிறது

 ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காட்பாடியில் நடக்கிறது

 ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காட்பாடியில் நடக்கிறது


ADDED : பிப் 01, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில்,வரும் 5 முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.

அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்காக, ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம், வரும் 5 முதல் 13ம் தேதி வரை வேலுார் மாவட்டம், காட்பாடி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடக்கிறது. இது தொடர்பாக, www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பில், பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பதாரர்கள், ஆள்சேர்ப்பு முகாமிற்கு கொண்டு வருவது கட்டாயம்.

அக்னிவீர் மகளிர் ராணுவக் காவல்துறை உட்பட அனைத்து அக்னிவீர் பிரிவினருக்கும் அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.ஏதேனும் சந்தேகங்கள்,விளக்கங்கள், உதவி தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் போர்ட் செயின்ட் ஜார்ஜ் வளாகத்தில் (600009) அமைந்துள்ள சென்னை ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்: 044-25674924. கடின உழைப்பும் பயிற்சியும் மட்டுமே தகுதியின் அடிப்படையில் தேர்வை உறுதி செய்யும்.

தேர்ச்சி பெற அல்லது உதவுவதாகக் கூறும் தரகர்கள், மோசடிக்காரர்களிடம் விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us