ADDED : ஏப் 11, 2026 10:26 PM
புதுச்சேரி: ராணுவ பணிக்கு புதுச்சேரியில் 3 மையங்களில் (12ம் தேதி) தேர்வு நடக்கிறது.
தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகளுக்கான தேர்வுகளை நடத்த புதுச்சேரியை ஒரு மையமாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்துள்ளது.
இதையொட்டி, புதுச்சேரி ஒருங்கிணைந்த ராணுவ சேவைக்கான தேர்வு கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் இன்று (12ம் தேதி) 3 பிரிவுகளில் தேர்வு நடக்கிறது. இதில் 140 தேர்வர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமிக்கான தேர்வு 2 பிரிவுகளில் நடக்கிறது. இதில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் 277 தேர்வர்களுக்கும், லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 195 தேர்வர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 612 தேர்வர்கள் புதுச்சேரியை தேர்வு மையத்தை தேர்வு செய்துள்ளனர்.
தேர்வர்களுக்கு புதுச்சேரி அரசு புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு துவங்கும் அரை மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையங்கள் மூடப்படும், தேர்வு அட்மிட் கார்டு, ஆதார் கார்டு கட்டாயமாக எடுத்து வரவேண்டும் என, நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
