/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராணுவ மண் கலசம் நாளை புதுச்சேரி வருகை
/
ராணுவ மண் கலசம் நாளை புதுச்சேரி வருகை
ADDED : ஆக 01, 2025 02:32 AM
புதுச்சேரி: அகில இந்திய யாதவ மகா சபை நடத்தும் 'ராணுவ மண் கலச யாத்திரை' நாளை புதுச்சேரி வர உள்ளது.
அகில இந்திய யாதவ மகா சபை சார்பில், 'ராணுவ மண் கலச யாத்திரை' நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை, நாளை (2ம் தேதி) புதுச்சேரி வர உள்ளது.
ராணுவ மண் கலசத்திற்கு, மரியாதை செலுத்தும் நிகழ்வு, புதுச்சேரி தமிழ் சங்கத்தில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இதில், அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, அகில இந்திய யாதவ மகா சபை தேசிய செயல் தலைவர் (தெற்கு) சோம்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ஏற்பாடுகளை, புதுச்சேரி யாதவ முன்னேற்ற சங்க தலைவர் ரவி, செயலாளர் மூர்த்தி, வரதராசு மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.