/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு உயர் அதிகாரியை ஆபாசமாக பேசி கவர்னருக்கு குறுந்தகவல் அனுப்பியவர் கைது
/
அரசு உயர் அதிகாரியை ஆபாசமாக பேசி கவர்னருக்கு குறுந்தகவல் அனுப்பியவர் கைது
அரசு உயர் அதிகாரியை ஆபாசமாக பேசி கவர்னருக்கு குறுந்தகவல் அனுப்பியவர் கைது
அரசு உயர் அதிகாரியை ஆபாசமாக பேசி கவர்னருக்கு குறுந்தகவல் அனுப்பியவர் கைது
ADDED : மார் 16, 2024 06:02 AM

காரைக்கால்: காரைக்காலில் அரசு உயர் அதிகாரியை ஆபாசமாக பேசி கவர்னருக்கு குறுந்தகவல் அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் தாசில்தாராக பொய்யாத மூர்த்தி பணியாற்றி வருகிறார்.
இவரது அலுவலகத்துக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் மனு வந்துள்ளது.
பின்னர் தாசில்தார் பொய்யாதமூர்த்தி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சுரக்குடி தேனுார் ராஜிவ்நகரை சேர்ந்த உத்திரநாதன்,49: நிலத்தை ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது. இதனால் தாசில்தார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த உத்திரநாதன் கடந்த 27ம் தேதி திருநள்ளாறு தாசில்தார் பொய்யாதமூர்த்தி,வருவாய் அதிகாரி சண்முகம்நாதன், துணை ஆட்சியர் (வருவாய்)ஜான்சன் ஆகியோரை ஆபாசமாக பேசி புதுச்சேரி கவர்னர் மற்றும் வருவாய்துறை அலுவலகத்திற்கு இ.மெயில் மூலம் குறுத்தகவல் அனுப்பியுள்ளார்.
கவர்னர் அலுவலகம் மற்றும் தாசில்தார் பொய்யாதமூர்த்தி புகாரின் பேரில் காரைக்கால் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையில் உத்திரநாதன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

