தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கனுாரில் கலை விழா

திருக்கனுாரில் கலை விழா

திருக்கனுாரில் கலை விழா


ADDED : ஆக 16, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: அரசு கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் திருக்கனுாரில் நடக்கும் கலை விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவில் திடலில் அரசு கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 3 நாள் ‘புதுச்சேரி கலை விழா’ நேற்று முன்தினம் (15ம் தேதி) துவங்கியது. 

அன்று மாலை நாத சங்கமம் குழுவினரின் மங்கல இசை, கர்நாடகா–பூஜா குனிதா, ஜம்மு காஷ்மீர்– டோக்ரி, ஜாகர்னா, கைக்கிலப்பட்டு ரமேஷ் கலைக்குழுவினரின் காளியாட்டம், பம்பை உடுக்கை, ராஜரத்தினத்தின் மெல்லிசை நடந்தன.

நேற்று பரத சமுத்ராலயா சுதாலட்சுமியின் பரதநாட்டியம், மேற்கு வங்காளம்–புருலியா செள, உத்தரகாண்ட்– சப்போலி, சாலியா, டோக்ரி–ஜாகர்னா, கலைச்செல்வன் கலைக்குழுவின் ஒயிலாட்டம், கோலாட்டம், சாட்டை குச்சியாட்டம், தேவநாதசாமி தெருத்கூத்து சபாவின் தெருக்கூத்து நடந்தது. ஏராளமானோர் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

நிறைவு நாளான இன்று (17ம் தேதி) மாலை 6:30 மணிக்கு ஆரணி, பெரியபாளையத்தம்மன் பெண் கலைஞர்கள் சங்கத்தின் கும்மிப்பாட்டு, அஸ்ஸாம்–பீஹூ, போர்தால், குஜராத்–சித்தி தமால், புதுவை கோகுலம் கலைக்குழுவின் சிவன், பார்வதி நடனம், ராஜ்முகில் இசை குழுவினரின் மெல்லிசை நடக்கிறது.

ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத் துறை இளநிலை நுாலக உதவியாளர்கள் முருகையன், முருகானந்தம், உதவியாளர் அண்ணாமலை ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us