தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

 குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

 குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


ADDED : ஜன 05, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 04:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: மதகடிப்பட்டு குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

மதகடிப்பட்டில் மத்திய அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்திப்பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத குண்டான் குழி மகாதேவர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு சமீபத்தில் புதிதாக வந்துள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி சிலைக்கு கடந்த 29ம் தேதி மாலை 4:00 மணிக்கு கரிக்கோல விழா நடந்தது.

கோவிலில் நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 5:00 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதில் மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு குண்டான்குழி மகாதேவர் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளனமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மதகடிப்பட்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us