/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம்- நுாறடிச்சாலை பகுதியில் வழிப்பறி சம்பவத்தால் பரபரப்பு

ADDED : ஜூலை 15, 2025 04:54 AM

புதுச்சேரி : அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை இணைக்கும் புறவழிச்சாலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான சாலையை அகலப்படுத்தப்பட்டது.
மேலும் அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து புதுச்சேரி நுாறடிச்சாலையை இணைக்கும் வகையில் 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை (பைபாஸ்) பல கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலையில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை மடக்கி வழிப்பறியில் ஈடுப்பட்டு வரும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
நேற்று இரவு 11.30 மணிக்கு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெரியவரிடம் சில மர்ம நபர்கள் மடக்கி மொபைல் போனை பறித்து சென்றுள்ளனர். இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் பார்த்து வழிப்பறி ஆசாமிகளை துரத்திச்சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.