தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அருணாசலேஸ்வரர் 4

அருணாசலேஸ்வரர் 4

அருணாசலேஸ்வரர் 4


UPDATED : நவ 23, 2026 08:49 PM

ADDED : நவ 23, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:49 PM ADDED : நவ 23, 2026 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

23.11.26/தி.மலை/என்.ஆர்.பூவேந்திரன்/98940 09140/

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதானம்

- தல விருட்சம் - மகிழமரம்

மூன்றாம் பிரகாரத்தில் தலவிருட்சமாக அமைந்துள்ளது மகிழ மரம் ஆகும்.நீண்டகாலமாக அமைந்துள்ள இந்த இடத்தில் தென்முகக்கடவுளாம் தக்ஷணாமூர்த்தியும் அடுத்து மகிழமரத்து விநாயகர் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்துள்ளார். தென்முகக்கடவுள் தக்ஷணாமூர்த்தியும் நமக்கு காட்சி கிடைக்கிறது. அருகிலேயே ஜலகண்டேஸ்வரர் அமர்ந்துள்ளார். இம்மேடையில் கிழக்குத் திசையில் நின்று பார்த்தால் ஒன்பது கோபுரங்களை நாம் பார்க்கலாம். இது மிக அரிய தொரு காட்சியாக உள்ளது.

முருகனே முதற் கடவுள்

கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவர் அருணகிரிநாதரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அருணகிரிநாதரின் பக்தியை இகழ்ந்தார். அருணகிரிநாதர் முருகப்பெருமானை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தில் ஒரு துாணில் காட்சி தந்தார். இதனால் இவருக்கு கம்பத்திளையனார் (கம்பம் என்றால் துாண், இளையனார் என்றால் முருகன்) என்ற பெயர் பெற்றார்.

மோட்ச தீபம் போடுதல்

கோவிலில் கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகளில் இறந்தவர்கள் மோட்சம் சென்றடைய வேண்டுதல் செய்து இறந்தவர்கள் பெயரில் உடல் அடக்கம் செய்யப்படும் நாள், அல்லது ஈமக்கிரியை செய்யும் நாள், அல்லது திதி அன்று அவரவர்களின் பிராத்தனைக்கு ஏற்றவாறு நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயில் மோட்ச தீபம் போடப்பட்டு வருகிறது. இது எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத பிராத்தனை சிறப்பாகும்.

கரும்புத் தொட்டில் கட்டுதல்

பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும், திருக்கோயிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து, புதிய புடவையினால் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிராத்தனை செலுத்துவது எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத பிராத்தனை சிறப்பாகும்.

ஆணவம் அடக்கும் பைரவர்:

கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இவரது சிலையை எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, தலையில் பிறைச்சந்திரன் மற்றும் திருவாட்சியுடன் கபால மாலையுடன் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

நந்திக்குச் செய்யும் பெருமை

மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களால் ஆன மாலை அணிவித்து பூஜை செய்யப்படும். அந்த நேரத்தில் அண்ணாமலையார் தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக நந்தியின் முன் எழுந்தருளி அவருக்குக் காட்சி தருவார்.

நான்கு முக லிங்கம்

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன் இங்குத் தனித் சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா இங்குச் சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரம்மா தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேத்ததை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

செந்துார விநாயகர்

ஆஞ்சநேயருக்குச் செந்துாரம் பூசி அலங்கரிப்பது போல், இத்தலத்திலுள்ள விநாயகருக்குச் செந்துாரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரை வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஒரு நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்குச் செந்துாரம் சாத்தும் வைபவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us