UPDATED : நவ 23, 2026 08:49 PM
ADDED : நவ 23, 2026 08:49 PM
22.11.26/தி.மலை/என்.ஆர்.பூவேந்திரன்/98940 09140//
திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள்
திருவண்ணாமலையில், 14 கி.மீ கிரிவலப் பாதையில் எட்டு திசைகளையும் காக்கும் விதமாக அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளன. கிரிவலம் செல்லும்போது இடப்பக்கம் நடந்து இந்த லிங்கங்களைத் தரிசிக்கலாம்.
* இந்திர லிங்கம் (கிழக்கு): கிரிவலப் பாதையில் முதலில் தரிசிக்கப்படும் லிங்கம். செல்வ வளம், புகழ், நீண்ட ஆயுள் தரும்.
* அக்னி லிங்கம் (தென்கிழக்கு): இரண்டாவது லிங்கம். நோய்கள், பயம், பகை நீங்கும்.
* எம லிங்கம் (தெற்கு): மூன்றாவது லிங்கம். ஆயுள் பலம், பயம் நீங்குதல், பொருளாதார வளம் கிடைக்கும்.
* நிருதி லிங்கம் (தென்மேற்கு): நான்காவது லிங்கம். உடல் நலம், பிள்ளைப்பேறு, செல்வம் கிட்டும்.
*வருண லிங்கம் (மேற்கு): ஐந்தாவது லிங்கம். உடல் நலம் மற்றும் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
*வாயு லிங்கம் (வடமேற்கு): ஆறாவது லிங்கம். மன அமைதி, உடல் நல நிவாரணம் தரும்.
*குபேர லிங்கம் (வடக்கு): ஏழாவது லிங்கம். செல்வச் செழிப்பு மற்றும் வளமான வாழ்வு கிடைக்கும்.
* ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு): எட்டாவது லிங்கம். ஞானம், மன அமைதி, கலையில் தேர்ச்சி தரும்.
இடுக்கு பிள்ளையார் கோவில்:
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில், கிரிவலம் பாதையில், குபேர லிங்கத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. இடுக்கு பிள்ளையார் கோவில் என அழைக்கப்பட்டாலும் விநாயகர் சிலை இங்கு இல்லை. தரைப்பகுதியில் கால் பாத சிற்பம் காணப்படும். இடுக்கு பிள்ளையார் கோவிலில் நுழைந்து வரும் போது பக்தர்கள் இந்தப் பாதத்தை தொட்டு வணங்குகின்றனர். மூன்று வாசல்களை கொண்டவை, பின்பக்க வாசல் வழியாக நுழைந்து, இரண்டாவது வாசலை தவழ்ந்தபடி அடைந்து, மூன்றாவது வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இந்த கோவிலில் உள் நுழைந்து வந்தால், பில்லி சூனியம் அகலும், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்று நம்புகின்றனர். மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் இந்த கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவர்.
