/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
/
வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
ADDED : ஜூன் 27, 2025 05:14 AM

திருபுவனை: சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் பிரசித்திப்பெற்ற சப்த மாதா கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மாங்கனி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதாக்கள் எழுந்தருளுகின்றனர்.
இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி நேற்று துவங்கியது. விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு வராகி அம்மனுக்கு கலச பூஜை, நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது.