தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாக்காலில் அடைப்புகளை அகற்ற அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நடவடிக்கை

வாக்காலில் அடைப்புகளை அகற்ற அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நடவடிக்கை

வாக்காலில் அடைப்புகளை அகற்ற அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நடவடிக்கை


UPDATED : அக் 21, 2026 08:32 PM

ADDED : அக் 21, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:32 PM ADDED : அக் 21, 2026 08:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் வாய்க்கால் அடைப்புகளை அகற்ற அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதி, ராஜாஜி நகர், தொட்டுப்பாளையம், புதுப்பேட்டை, அகத்தியர் வீதி, முத்துலிங்கபேட்டை, ஏர்போர்ட் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் வாய்க்கால்களில் மழைநீர் சீராகச் செல்ல முடியாமல் தடை ஏற்படுவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதையெடுத்து, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., பைக்கில் தொகுதி முழுதும் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அப்போது, வாய்க்கால்களில் மரங்களின் வேர்கள் வளர்ந்து மழைநீர் செல்வதற்குத் தடையாக இருந்தது. சில இடங்களில் வாய்க்கால்களின் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளது.

மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றவும், சேதமடைந்த தடுப்புச் சுவர்களைச் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us