UPDATED : அக் 09, 2026 08:39 PM
ADDED : அக் 09, 2026 08:37 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட கட்சியினருக்கு அசோக் ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
இந்த வெற்றி எனது தாய் மற்றும் முதல்வர் ரங்கசாமியின் ஆசீர்வாதத்தால் கிடைத்தது. முதல்வர் ரங்கசாமி அனுசரித்து வழி நடத்தினார். எனக்கு எல்லா விதத்திலும் ஆதரவு கொடுத்தார். கூட்டணி கட்சி தலைவர்களும் ஆதரவு தந்தனர். அவர்களின் கடின உழைப்பும், தொகுதி மக்களின் ஆசீர்வாதமும் வெற்றிக் காரணம். இந்த வெற்றிக்கு பாடுபட்ட கட்சியினர் அனைவருக்கும் நன்றி.
கல்வி மற்றும் மகளிர் மருத்துவ திட்டம் முக்கியமாக செயல்படுத்தப்படும். உடனடியாக அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இது முதல்வருக்கு கிடைத்த வெற்றி. தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் வெற்றி. என்மீது நம்பிக்கை வைத்து ஜெயிக்க வைத்தற்கு கடைசி வரைக்கும் அனைத்து விதமாக உதவிகளையும் செய்வேன்’ என்றார்.
