UPDATED : அக் 09, 2026 08:39 PM
ADDED : அக் 09, 2026 08:37 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஒரு நாளில் தாய் மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி ராஜலட்சுமி, 60. இவர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வீடு திரும்பததால் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அதே போல, அன்றைய தினத்தில், இவரது மகன் அருள்குமார், 36; வீட்டில் இருந்து முடிவெட்ட சலுான் கடைக்கு சென்றவர் மாயமானார். இதுகுறித்து, புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
