/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச கால்பந்து போட்டி அஸ்வின்குமார், முரளிதரன் நடுவராக தேர்வு
/
சர்வதேச கால்பந்து போட்டி அஸ்வின்குமார், முரளிதரன் நடுவராக தேர்வு
சர்வதேச கால்பந்து போட்டி அஸ்வின்குமார், முரளிதரன் நடுவராக தேர்வு
சர்வதேச கால்பந்து போட்டி அஸ்வின்குமார், முரளிதரன் நடுவராக தேர்வு
ADDED : ஆக 28, 2025 02:02 AM

புதுச்சேரி: இலங்கையில், நடைபெற உள்ள, சர்வதேச அளவிலான, கால்பந்து போட்டியின் நடுவர்களாக, புதுச்சேரியை சேர்ந்த இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தெற்காசிய கால்பந்து சம்மேளனம் நடத்தும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி வரும் செப்டம்பர் 15 முதல் 27ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்தியாவின் சார்பாக இரண்டு கால்பந்து நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் பெருமைக்குறிய விஷயமாகும்.
புதுச்சேரி மின் துறையில் பணியாற்றி வரும் அஸ்வின்குமார், இவர், ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் பயிற்சி பெற்ற சிறந்த நடுவர் ஆவார். திருக்கனுார் புதுநகரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன்.
இவர், தனது பகுதியில் உள்ள சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் இலவசமாக கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். இவர்கள் இருவரும், இந்தியன் சூப்பர் லீக் இறுதி போட்டியிலும், டுரன்ட் கப் எனப்படும், இந்திய முப்படைகள் நடத்தும் புகழ்பெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்திலும் நடுவர்களாக பணியாற்றினர்.
இதன் மூலமாக, வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில், தெற்காசிய கால்பந்து சம்மேளனம் சார்பில் நடைபெற உள்ள 17 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டிக்கு, அஸ்வின்குமார், முரளிதரன் இருவரும் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், அமைச்சர் ஜான்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி கால்பந்து வரலாற்றில், முதல் முறையாக இரண்டு நடுவர்கள், ஒரே நேரத்தில் சர்வதேச அளவிலான தேர்வில் இடம் பெற்று, மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.