/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
ADDED : ஆக 28, 2025 02:01 AM

ஹதேனாக்களின் மேல் மார்பு பகுதி சுவாசத்துடன் இணைந்த ஆத்யம் பிராணாயாமம் கழுத்துப்பட்டை சுவாசப் பயிற்சி செயல்முறையை கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம், மஹாத்யோகா பிராணாயாமம் செய்முறை பயிற்சியை பார்ப்போம்...
ஷரபாசனம் சதுஸ் பாதாசனத்தில் இருந்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே தலையையும், காலையும் முடிந்த அளவு உயரத்திற்கு துாக்கவும். சுவாசத்தை வெளியிட்டபடி காலை முன்னிருந்த நிலையில் வைத்து, தலையை கைகளுக்கு நடுவில் தாழ்த்தவும். இருமுறை மேலும் செய்து அடுத்த பக்கத்திலும் இதையே திரும்ப செய்ய வேண்டும்.
இந்நிலையில் உடல் இருக்கும்போது, கால்களை எந்தப்பக்கம் துாக்குகிறோமோ அந்தப் பக்கத்தில் காற்றானது நுரையீரலின் கீழ், நடு மற்றும் மேல் பகுதிகளில் சீராக பரவுகிறது.
சிரீ கிரியா சதுஸ் பாதாசனத்தில் இருந்து சுவாசத்தை உள்ளிழுத்தக் கொண்டே, காலையும், தலையையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரத்தில் துாக்க வேண்டும்.
சுவாசத்தை வெளியிட்டபடி, கால் முட்டியை உள்ளே இழுத்து தலையை குனிந்து முட்டியை தொட வேண்டும்.
இதேபோல் இருமுறை செய்யவும். இதையே அடுத்த பக்கத்திலும் செய்ய வேண்டும்.
இந்த கிரியை செய்யும்போது, எந்த கால் மேலே இருக்கிறதோ, அந்தப் பக்கத்து நுரையீரலின் கீழ், நடு, மேல் பகுதிகளில் காற்று சீராகப்பரவுகிறது.
வியாகரஹ பிராணாயாமம் சதுஸ் பாத நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி கழுத்தை நீட்டி, தலையை துாக்கி, கைகளை அழுத்தியபடி முதுகை கீழிறக்கவும்.
மூச்சை வெளியிடும்போது, முதுகை மேலே துாக்கி கைகளுக்கு இடையே தலையை வைக்க வேண்டும். இதேபோன்று ஒன்பது முறை செய்ய வேண்டும்.
இந்தப் பிராணாயாமத்தினால், காற்று நுரையீரலின் அனைத்து பகாங்களிலும் பரவி, சுவாச மண்டலத்தை வலுவடையச் செய்து, நீண்ட முழுமையான சுவாசத்திற்கு உதவுகிறது.
மஹாத்யோகா பிராணாயாமத்தின் தொடர்ச்சியான முழுமையான சுவாசப் பயிற்சியை அடுத்த வாரம் பார்ப்போம்...

