ADDED : மார் 20, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், :ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த வார்க்கால்ஓடை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 32; ஆட்டோ டிரைவர். இவருக்கும், பாகூரை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த 17ம் தேதி, பாகூரை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், கலைச்செல்வன் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்த கலைச்செல்வன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார், பாகூரைச் சேர்ந்த பிரதீப், அருள்தாசன், அய்யனார், ஜெயதீரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

