ADDED : செப் 30, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் கட்டும் பணி தொடர்பாக இரு கோஷ்டி இடையே அடிக்கடி மோதல் மற்றும் பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வீரமுத்து 28; என்பவர், முள்ளோடை வாரச்சந்தை அருகே டிபன் வாங்க சென்றுள்ளார்.
அங்கு, அதே பகுதியை சேர்ந்த பூவரசன், கவியரசன், பாஸ்கரன், முத்து, ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட கும்பல், முன்விரோதம் காரணமாக, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றது.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

