ADDED : மார் 04, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பம் ஓடைவெளி, பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி, 70; இவர் தனது மனைவி மகாலட்சுமியுடன், அதே பகுதியில் தென்னங்கீற்று முடைந்து வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று அங்கு வந்த குப்பன், சுமன் மற்றும் அடையாளர் தெரியாத 2 பேர் சேர்ந்து, சக்கரபாணியை தாக்கி, இனிமேல் போலீஸ் நிலையத்திற்கு சென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வீட்டு சென்றனர்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை தேடிவருகின்றனர்.

