ADDED : ஆக 25, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சட்டசபையில் மறைந்த இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது.
தற்காலிக சபாநாயகர் அன்பழகன் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். முதல் அலுவலாக இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மறைந்த புதுச்சேரி முன்னாள் கவர்னர் லகேரா, புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் யூ.சி. ஆறுமுகம், நாராயணசாமி, பாலசுப்ரமணியம், இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அன்பழகன் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அவர்களின் மக்கள், அரசியல் பணிகளை பட்டியலிட்டு நினைவு கூர்ந்தார்.
பின் ு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்ற அஞ்சலி செலுத்தினர்.
