ADDED : ஆக 25, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வழக்கை விசாரித்து வந்த, நீதிபதி சேரலாதன் மாகே கோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி- கடலுார் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதியாக சேரலாதன் பணியாற்றி வருகிறார்.
இந்த கோர்ட்டில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரர் மரிய குலோத்தை முன்விரோதத்தில் தாக்கிய வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சேரலாதனை மாகே கோர்ட்டிற்கு மாற்றி சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, அந்த வழக்கின் விசாரணை வரும் 31ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் வருவது குறிப்பிடத்தக்கது.
