/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தல் பணிகள் கிழக்கு மாவட்ட காங்., ஆலோசனை
/
சட்டசபை தேர்தல் பணிகள் கிழக்கு மாவட்ட காங்., ஆலோசனை
சட்டசபை தேர்தல் பணிகள் கிழக்கு மாவட்ட காங்., ஆலோசனை
சட்டசபை தேர்தல் பணிகள் கிழக்கு மாவட்ட காங்., ஆலோசனை
ADDED : செப் 13, 2025 07:24 AM

புதுச்சேரி : கிழக்கு மாவட்ட காங்., கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கிழக்கு மாவட்ட காங்., தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி காங்., பொறுப்பாளர் கிரிஷ் ஜோடகர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்., மூத்த துணை தலைவர் தேவதாஸ், மாநில செயலாளர் மருதுபாண்டியன், வட்டார தலைவர் கள் ராஜ்மோகன், ஜெரால்ட், ஆறுமுகம், ரமேஷ், குமரன், லட்சுமணன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசின் தோல்விகளையும், மக்கள் விரோத போக்கினை கண்டித்தும், எதிர்வரும் தேர்தலை சந்திப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.