
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மின்சார ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது பேரவை கூட்டம் குயவர்பாளையம் கீர்த்தி மஹாலில் நடந்தது.
சங்கத்தின் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கி, ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் குமரன் வரவேற்றார்.
கூட்டத்தில், மின்துறை தலைமை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், கண்காணிப்ப பொறியாளர் கனியமுதன் ஆகியோர் கலந்து கொண்டு, 2023--24ம் கல்வியாண்டில் 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினர். இதில், சங்கத்தின் துணைத் தலைவர் வேல்முருகன், இயக்குனர்கள் தணிகாசலம், முருகன், பரசுராமன், ராம் மோகன், மணிகண்டன் வாழ்த்தி பேசினர். திருமூர்த்தி நன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.