தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை நாளை கூடுகிறது இடைக்கால பட்ஜெட் தாக்கல்

 சட்டசபை நாளை கூடுகிறது இடைக்கால பட்ஜெட் தாக்கல்

 சட்டசபை நாளை கூடுகிறது இடைக்கால பட்ஜெட் தாக்கல்


ADDED : பிப் 11, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், வரும் நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதிலாக, அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இதற்காக 15வது சட்டசபையின் 6வது கூட்டத் தொடரின் மூன்றாம் பகுதி கூட்டம் நாளை 12ம் தேதி காலை 9:30 மணிக்கு சபாநாயகர் செல்வம் தலைமையில் கூடுகிறது. இக்கூட்டத்தில், நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மேலும் 2025--26ம் நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் கோரப்படுகிறது.நாளை சட்டசபை கூடுவதை தொடர்ந்து சட்டசபையை தயார் படுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார். அப்போது, சட்டசபை செயலர் தயாளன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us