/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவி பொறியாளர் பணியிடங்கள் காலி: பொதுப்பணித் துறையில் பணிகள் ஸ்தம்பிப்பு; பொதுப்பணித் துறை பணிகள் ஸ்தம்பிப்பு
/
உதவி பொறியாளர் பணியிடங்கள் காலி: பொதுப்பணித் துறையில் பணிகள் ஸ்தம்பிப்பு; பொதுப்பணித் துறை பணிகள் ஸ்தம்பிப்பு
உதவி பொறியாளர் பணியிடங்கள் காலி: பொதுப்பணித் துறையில் பணிகள் ஸ்தம்பிப்பு; பொதுப்பணித் துறை பணிகள் ஸ்தம்பிப்பு
உதவி பொறியாளர் பணியிடங்கள் காலி: பொதுப்பணித் துறையில் பணிகள் ஸ்தம்பிப்பு; பொதுப்பணித் துறை பணிகள் ஸ்தம்பிப்பு
ADDED : நவ 09, 2025 05:52 AM
அடுத்தடுத்து பல கோடி உட்கட்டமைப்பு திட்டங்கள் புதுச்சேரிக்கு வர உள்ள சூழ்நிலையில் பொதுப்பணி துறையில் உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசின் முக்கிய துறையாக பொதுப்பணித் துறை உள்ளது. இத்துறையில் செயற் பொறியாளர் - 19, உதவி பொறியாளர் - 76, இளநிலை பொறியாளர் - 224 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்துறையானது, போதிய பணியாளர்கள் இல்லாமல் நிலையில் பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக உதவி பொறியாளர் பணியில் 44 இடங்கள் காலியாக உள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
திட்ட மதிப்பீடு தயார் செய்து, நடக்கும் நேரில் அளந்து அளவீடு செய்து பதிவு செய்வது, கண்காணிப்பது, திட்டங்களை செயல்படுத்துவது என, அனைத்து பொதுப்பணித் துறையின் பணிகளையும் இளநிலை பொறியாளர்கள் இழுத்துபோட்டு கொண்டு செய்கின்றனர்.
இதே பணியை 50 சதவீதம் உதவியாளர்கள் தான் மேற்பார்வை செய்கின்றனர். அடுத்து உயர்நிலையில் உள்ள செயற்பொறியாளர்களுக்கும் ரிப்போர்ட் செய்கின்றனர்.
இப்படி இளநிலை பொறியாளர்களுக்கும் செயற்பொறியாளர்களுக்கு பாலமாக இருக்கும் உதவி பொறியாளர் பணியிடங்கள் இன்னும் நிரப்பாமல் உள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், ஒரு செயற்பொறியாளரின் கீழ் நான்கு உதவி பொறியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு உதவி பொறியாளர் கீழும் நான்கு இளநிலை பொறியாளர்கள் உள்ளனர்.
இதனால் உதவி பொறியாளர் பணியிடத்தை நிரப்பாததால் அனைத்து மட்டத்திலும் பொதுப்பணி துறையின் பணிகள் ஸ்தம்பித்து நிற்கிறது.
புதிய மேம்பாலம் திட்டம், ஆசியா வளர்ச்சி திட்டம் என, ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேலான உட்கட்டமைப்பு திட்டங்கள் புதுச்சேரிக்கு அடுத்தடுத்து வர உள்ளது. அப்படி இருக்கும்போது இந்த பணிகளை கவனிக்க போதிய உதவி பொறியாளர் இல்லாத நிலையில் எப்படி செயல்படுத்த முடியும்.
தற்போது பணியில் எஞ்சி இருக்கும் சில உதவி பொறியாளர்களும் கடைசியாக 1987ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களும் ஓராண்டிற்குள் ஓய்வு பெற்று விடுவர்.
இப்படியே போனால் அப்புறம் பொதுப்பணி துறையில் உதவி பொறியாளர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
வழி இருக்கு.... தகுதி வாய்ந்த இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களாக பதவி கொடுப்பதன் மூலம் இப்பிரச்னையை தீர்க்க முடியும்.
இதற்கேற்ப இளநிலை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க துறை ரீதியான கமிட்டியும் கூடியது. ஆனால் இன்னும் உதவி பொறியாளர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இளநிலை பொறியாளர்களை ரெகுலர் செய்து, உதவி பொறியாளர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப கவர்னர், முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

