/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பெண்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி
/
3 பெண்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி
ADDED : நவ 09, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சேர்ந்த பெண்ணிற்கு, மர்ம நபர், தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, போலியான லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கை கிளிக் செய்து, பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78,195 எடுக்கப்பட்டது.
இதேபோல் முதலியார்பேட்டை மற்றும் லாஸ்பேட்டை பகுதி உட்பட ௩ பெண்களிடம் தனியார் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி போலி லிங்க் மூலம் ரூ.௧.௨௫ லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

