/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவி சப் இன்ஸ்பெக்டர் துாக்கு போட்டு தற்கொலை
/
உதவி சப் இன்ஸ்பெக்டர் துாக்கு போட்டு தற்கொலை
ADDED : ஜன 03, 2024 06:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி போலீஸ் பேண்ட் யூனிட் உதவி சப் இன்ஸ்பெக்டர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, வெண்ணிலா நகரைச் சேர்ந்தவர் வீரவந்திரன், 57; புதுச்சேரி போலீஸ் துறையில், பேண்ட் யூனிட்டில் உதவி சப் இன்ஸ்பெக்டராக பதவி வகித்து வந்த இவர், மூலக்குளம் ஆதித்யா அவென்யூ, 2வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரின் மூத்த மகள் மருத்துவம், இளைய மகள் பல் மருத்துவம் படித்துள்ளனர். மகன் சாப்ட்வேர் இன்ஜினியர்.
வீரவந்திரனுக்கு நீரிழிவு நோய் உள்ளதால் தினசரி 'வாக்கிங்' செல்வது வழக்கம். நேற்று காலை 4:30 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் கோரிமேடு வந்த வீரவந்திரன், போலீஸ் மைதானம் அருகில் உள்ள பேண்டு யூனிட் அலுவலகத்தின் பின்பக்கம் உள்ள மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வீரவந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரவந்திரன் பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், 'எனக்கு நீரிழிவு நோய், குடல் இறக்க நோய் இருப்பதால், வயிற்று வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என எழுதி இருந்தது.
பிரேத பரிசோதனை முடித்து வீரவந்திரன் உடல் உறவினர்களிடம் நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டது.