
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மூத்த வழக்கறிஞர்கள் பக்தவச்சலம், கிருஷ்ணன்,ராமலிங்கம், சுப்ரமணியன், அமாவாசை, ராமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்சிறில் மேத்திஸ் வின்சென்ட்,தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்து குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.
சங்கத்தில் மகளிர் உறுப்பினர்களுக்கு கூடுதலாக ஒரு இணை செயலாளரும், இரண்டு செயற்குழு உறுப்பினர்களும் ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.