/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளிகளுக்கு இடையே தடகள போட்டி
/
பள்ளிகளுக்கு இடையே தடகள போட்டி
ADDED : ஜன 03, 2026 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பள்ளி கல்வி உடற்கல்வி பிரிவு சார்பில், தவளக்குப்பத்தில், பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி நடந்தது.
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த தடகள போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் இருந்து 650 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, பரிசளிப்பு விழா பள்ளியில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் வரவேற்றார். மேல்நிலை கல்வி, இணை இயக்குனர் சிவகாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் ரங்கசாமி, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

