ADDED : ஜன 02, 2026 04:59 AM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவி லில் ராப்பத்து உற்சவத்தில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது.
வில்லியனுாரில் பிரசித்திப்பெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பகல் பத்து உற்சவம் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடந்தது.
வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து ராப்பத்து உற்சவம் துவங்கி நடந்து வருகிறது.
நேற்று நடந்த உற்சவத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு, சுவாமி உள்புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பட்டாச்சார்யார்கள் செய்திருந்தனர்.
