தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அன்னதானம் வழங்கிய ஊழியர் மீது தாக்குதல்

 அன்னதானம் வழங்கிய ஊழியர் மீது தாக்குதல்

 அன்னதானம் வழங்கிய ஊழியர் மீது தாக்குதல்


ADDED : பிப் 16, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அன்னதானம் வழங்கிய தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதலியார்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38. இவர், ஜவகர் நகர் முதல் தெருவில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனம் சார்பாக ஜவகர் நகர் பஸ் நிறுத்தம் அருகில் தினமும் அன்னதானம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் நிறுவனத்தில் வேலை செய்த வேல்முருகன் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தபோது, அவருடன், பாவாணர் நகரை சேர்ந்த ஆறுமுகம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதை யடுத்து, ஆறுமுகத்தின் உறவினர்கள் சிலர் சதீஷ்குமாரின் நிறுவனத்திற்கு வந்து அங்கிருந்த அமலன், 26, என்பவரை தாக்கினர். சதீஷ்குமார் மற்றும் ஆறுமு கமும் தனித்தனியே அளித்த புகார்களின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us