ADDED : பிப் 03, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சிறுவர்களை திட்டி தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
ஏம்பலம் அடுத்த கம்பிளிகாரன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 60, இவர் நேற்று முன்தினம் வீட்டு எதிரில் படுத்துக் கொண்டிருந்தார். அவரை அவரது மகள் பியுலா திட்டிக் கொண்டிருந்தார்.
அதனை வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 சிறுவர்களை, வெங்கடேசன் அசிங்கமாக திட்டி கல்லால் தாக்கினார்.
புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.