ADDED : பிப் 04, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : கொடுத்த கடனை திருப்பி கேட்டு துணி வியாபாரியை தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
நைனார்மண்டபம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 44; இவர் ஜவுளி துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மேலும், ஜவுளி தொழிலை பெருக்குவதற்கு, புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் வாங்கிய பணத்தை திருப்பி தரமுடியவில்லை.
நேற்று முருங்கப்பாக்கம் வழியாக வெங்கடேசன் பைக்கில் சென்ற போது, ராஜேஷ், இவரது நண்பரான ஏழுமலை ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கி மிரட்டி சென்றனர்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேஷ், ஏழுமலை ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.