/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை
/
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை
ADDED : செப் 02, 2025 10:03 PM
பாகூர்; பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., தங்கவிக்ரமன். இவரது மகன் ஜெகதீசன் 42; விவசாயி.
இவர், கடந்த 31ம் தேதி பாகூர் வெளியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில், கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த சஞ்சய் 20; வசந்த் 20; உள்ளிட்ட 5 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். ஜெகதீசன் அவர்களை கடந்து சிறிது துாரம் சென்றபோது, அந்த கும்பல் அவரை ஒருமையில் கூப்பிட்டனர்.
உடனே ஜெகதீசன் திரும்பி பார்த்து யாரை கூப்பிடுகிறீர்கள் என கேட்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின், ஜெகதீசன் வீட்டிற்கு வந்தார். அன்று இரவு, அந்த கும்பல் ஜெகதீசன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தது.
சத்தம் கேட்டு வெளியே வந்த ஜெகதீசனை, ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.
காயமடைந்த ஜெகதீசன் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த பசுபதி, சக்திவேல், சஞ்சய், வசந்த், முருகன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.