/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டை வாடகைக்கு எடுத்தவர் மீது தாக்குதல்
/
வீட்டை வாடகைக்கு எடுத்தவர் மீது தாக்குதல்
ADDED : ஜன 15, 2025 12:19 AM
புதுச்சேரி : பூட்டை உடைத்து, வாடகைக்கு எடுத்த நபரை, தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலியார்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் ராஜசுகுணன், 65, இவர் மின்துறையில், பணி செய்து ஓய்வு பெற்றவர். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த திரிபுரசுந்தரி, இவரது மகள் சங்கீதாவிற்கு சொந்தமான உழந்தை கீரப்பாளையம் பகுதியில் இடம் உள்ளது. அந்த இடத்தை ேஹாம் ஸ்டே நடத்துவதற்கு மாத வாடகை, 40 ஆயிரம், 3.5 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, ஒப்பந்தம் செய்துள்ளார். அதற்கான பராமரிப்பு பணிகளை அவர் செய்து வருகிறார்.
இந்நிலையில், ராஜசுகுணன் இல்லாத போது, கடந்த 11ம் தேதி, திரிபுரசுந்தரி, ஜீவா மற்றும் சிலர் ஹோம் ஸ்டே இடத்தில் இருந்த பூட்டை உடைத்து, மற்றோரு பூட்டை போட்டு, பூட்டி சென்றனர். ஏன் பூட்டை உடைத்தீர்கள் என திரிபுரசுந்தரியை கேட்ட போது, ஜீவா மற்றும் சிலர் ராஜசுகுணனை தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார், திரிபுரசுந்தரி, ஜீவா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

