ADDED : மே 15, 2025 11:53 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் கோவில் திருவிழாவில், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரளா நடன கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருமாம்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி, தினமும் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்பகுதியை சேர்ந்த சிலர், பெண் நடன கலைஞர்களிடம், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நடன கலை குழுவினருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கும்பல் நடன கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது. நடன கலைஞர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். அங்கிருந்த பொது மக்கள் அவர்களை சமாதானம் செய்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.