/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சலவை நிலையம் நடத்தியவர் மீது தாக்குதல்
/
சலவை நிலையம் நடத்தியவர் மீது தாக்குதல்
ADDED : ஜன 19, 2025 05:48 AM
புதுச்சேரி: சலவை நிலையம் நடத்தியவரை சரமாரியாக தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சாரம், சக்தி நகரை சேர்ந்தவர் இருதயராஜ், 48. இவர் நெல்லித்தோப்பு பகுதியில், சலவை நிலையம் நடத்தி வருகிறார். இவரிடம் காராமணிக்குப்பத்தை சேர்ந்த இளவரசன், 46. சலவைக்கு துணி கொடுத்தார்.
கடந்த 15ம் தேதி துணியை வாங்க, கடைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இளவரசன் மற்றும் அவரது நண்பர்கள் அய்யப்பன், சிவகுரு ஆகியோர் இருதயராஜை சரமாரியாக, தாக்கினர். அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

