/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
/
வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
ADDED : பிப் 23, 2024 03:37 AM
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் சிலர் கம்பெனி அருகே தங்கியுள்ளனர்.
கடந்த 19ம் தேதி மாலை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கம்பெனி எதிரே தங்கியுள்ள வடமாநில தொழிலாளர் ரத்திக்குமார் சாவ்வை தாக்கினர்.
அப்போது வெளியே வந்த கம்பெனி மேனேஜர் சையத் அன்வர், தட்டி கேட்டார்.
ஆத்திரமடைந்த அந்த கும்பல் கம்பெனிக்குள் புகுந்து அங்கிருந்த ரித்திக்குமார் உள்ளிட்ட சிலரை தாக்கிவிட்டு தப்பிசென்றனர்.
இது குறித்து மேலாளர் சையத் அன்வர் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுாார் போலீசார் வழக்குப் பதிந்து, தாக்குதல் நடத்திய நான்கு பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.