/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
/
தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 10, 2025 11:20 PM
புதுச்சேரி: பைக்கில் சென்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய, 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேதராப்பட்டு கரசூர் பகுதியை சேர்ந்தவர் முகிலன், 26. இவர், அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி வேலையை முடித்து விட்டு, பைக்கில் கரசூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். எதிரே பைக்கில் வந்தவர்கள் அவர் மீது மோதுவது போல, வந்தனர்.
ஏன் வேகமாக வருகிறீர்கள் என முகிலன் கேட்டார். ஆத்திரமடைந்த, பைக்கில் வந்த பாப்பாஞ்சாவடி வேந்தன், அஜய், நந்தா ஆகியோர் முகிலனை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த முகிலன் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, வேந்தன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.