/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன மேலாளர் மீது தாக்குதல்
/
தனியார் நிறுவன மேலாளர் மீது தாக்குதல்
ADDED : பிப் 03, 2024 12:13 AM
பாகூர், -விருதுநகர், அவ்வையார் தெருவை சேர்ந்தவர் அழகு மாரிக்கனி, 39; கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் தனியார் நிறுவன மேலாளர். முருங்கப்பாக்கம் சுதானா நகரில் தங்கியுள்ளார்.
கடந்த 31ம் தேதி இரவு வேலை முடிந்து, அழகு மாரிக்கனி, தனியார் பஸ்சில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கிருமாம்பாக்கம் அருகே பஸ் நின்றபோது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பஸ்சிற்குள் ஏறி, அழகு மாரிக்கனியை ஆபாசமாக திட்டி, தாக்கினர்.
அவர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோடினார். அவர்கள் விரட்டிச் சென்று மீண்டும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். அப்பகுதியில் மக்கள் கூடியதால், மூவரும் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த அழகு மாரிக்கனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
அவர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கிருமாம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ், கோகுல் ரமணன், ராமநாதன் ஆகியோர் மீது சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

