/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற மின்துறை ஊழியர் மீது தாக்குதல்
/
ஓய்வு பெற்ற மின்துறை ஊழியர் மீது தாக்குதல்
ADDED : ஜன 16, 2025 05:56 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டை ஒத்த வாடை வீதியை சேர்ந்தவர் ராஜசுகுணன் 65, ஓய்வு பெற்ற மின்துறை ஊழியர். இவர், ரெட்டியார்பாளையம் திரிபுரசுந்தரியின் மகள் சங்கீதாவிற்கு சொந்தமான உழந்தை கீரப்பாளையத்தில் உள்ள இடத்தை வாடகைக்கு எடுத்து ஹோம் ஸ்டே நடத்தி வருகிறார்.
இந்த இடத்துக்கு மாத வாடகை, ரூ. 40 ஆயிரம், அதற்கு அட்வான்சாக ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து, ஒப்பந்தம் செய்தார்.
கடந்த 11ம் தேதி, திரிபுரசுந்தரி, ஜீவா மற்றும் சிலர் ஹோம் ஸ்டே இடத்தில் இருந்த பூட்டை உடைத்து, மற்றொரு பூட்டைபோட்டு பூட்டி சென்றனர்.
ஏன் பூட்டை உடைத்தீர்கள் என திரிபுரசுந்தரியை கேட்ட போது, ஜீவா மற்றும் சிலர் ராஜசுகுணனை தாக்கினர். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார், திரிபுரசுந்தரி, ஜீவா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

