ADDED : செப் 11, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
லப்போர்த் வீதியை சேர்ந்தவர் தீபராஜ், 35; இவர் மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் அருகில் பொம்மை கடை வைத்துள்ளார். நேரு வீதி பிளாட்பாரத்தில் வசித்து வரும் குரு என்பவர் கடையில் இருந்த பொம்மையை, பணம் கொடுக்காமல் எடுத்து சென்றார். அதை கேட்ட தீபராஜை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, குருவை தேடி வருகின்றனர்.