/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வன்னியர் சங்க நிர்வாகி மீது தாக்குதல்
/
வன்னியர் சங்க நிர்வாகி மீது தாக்குதல்
ADDED : செப் 01, 2025 12:22 AM
பாகூர் : பாகூரில் வன்னியர் சங்க இளைஞரணி நிர்வாகியை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு 23; மணவெளி பகுதி வன்னியர் சங்க இளைஞரணி துணைத் தலைவர். இவர், கடந்த 30ம் தேதி மாலை பரிக்கல்பட்டு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பாகூரை சேர்ந்த சூரியா, பைக்கில் வேகமாக முந்தி சென்று விஷ்ணுவை வழிமறித்தார்.
அப்போது, சூர்யா, துாக்கு பாலம் அருகே என்னை ஏன் முறைத்து பார்த்தாய் என கேட்டு, விஷ்ணுவிடம் தகராறு செய்து, அங்கு கிடந்த தென்னை மட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். காயமடைந்த விஷ்ணு, பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து, விஷ்ணு அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து சூர்யாவை தேடி வருகின்றனர்.