தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் கோவில் மரத்தை வெட்டி கடத்த முயன்தால் பரபரப்பு

காரைக்காலில் கோவில் மரத்தை வெட்டி கடத்த முயன்தால் பரபரப்பு

காரைக்காலில் கோவில் மரத்தை வெட்டி கடத்த முயன்தால் பரபரப்பு


ADDED : ஆக 26, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் கோவிலுக்குச் சொந்தமான மாமரத்தை வெட்டி கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் பாரதியார் வீதியில் கைலாசநாதர் கோவில் நித்திய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானம் அமைந்துள்ளது. கோவிலையொட்டி, அமைந்துள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தக்கரையின் தெற்கு பகுதியில், தேவஸ்தானத்துக்குச் சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான மாமரம் ஒன்று இருந்தது.

நேற்று முன்தினம் கோவிலுக்கு அருகில் வசிக்கும் ஒருவர், சிலருடன் வந்து கோவில் மாமரத்தை வெட்டி வாகனத்தில் ஏற்றி, மரவாடிக்கு கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த கோவில் தனி அதிகாரி விநாயகமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மரத்துடன் வாகனத்தை மடக்கினர்.

தகவல் அறிந்த நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரம் ஏற்றி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us