ADDED : ஆக 26, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், பவித்ரோற்சவ விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
புதுச்சேரி, காந்தி வீதியில் திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பவித்ரோற்சவ விழா கடந்த 24ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 25ம் தேதி காலை 9:00 மணிக்கு பவித்ர பூஜை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு சதுர்தசி திதி, திருவோணம் நட்சத்திர மகா அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10:30 மணிக்கு பவித்ர சமர்பணம், கலசாபிஷேக பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி ராஜேஷ்கண்ணா மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
